ஆனால், இந்த logo கூகிளின் பிறந்தநாளைத்தான் குறிக்கின்றது என ஒரு சாராரிடமிருந்து ஊகம் எழுப்பப்படுகின்றது. கூகிள் 2002 ஆம் ஆண்டிலிருந்து - நான்காவது பிறந்தநாளிலிருந்து logo இனை அதற்கேற்ப அலங்கரித்து வருகின்றது. ஆனால், கூகிளின் பிறந்தநாள் எப்போது என்ற மயக்கம் இப்போதும் நிலவுகின்றது.
செப்ரெம்பர் 7 மற்றும் செப்ரெம்பர் 27 ஆகிய இரு நாட்களிலும் கூகிள் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வந்திருக்கின்றது. இது தொடர்பாக கூகிள் பின்வருமாறு சொல்கின்றது.
Google opened its doors in September 1998. The exact date when we celebrate our birthday has moved around over the years, depending on when people feel like having cake.
ஆனால், அண்மைய வருடங்களில் செப்ரெம்பர் 27ம் திகதியில் தான் தனது logo இனை பிறந்தநாளுக்கேற்ப மாற்றியிருக்கின்றது.
4வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 27th, 2002
5வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 7th, 2003
6வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 7th, 2004
7வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 27th, 2005
8வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 27th, 2006
9வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 27th, 2007
10வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 27th, 2008
11வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 27th, 2009
12வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 27th, 2010 ???
நேற்றைய logo விற்கான காரணம் செப்ரெம்பர் 27ம் திகதிவரை புரியாத புதிராகவே தான் இருக்குமா?
2 comments:
அருமையான தேடல் வாழ்த்துக்கள் சகோதரா...
நல்ல தகவல் திரட்டு.
செப் 7 கூகிள் ஆரம்பிக்கப்பட்டாலும் பிறந்தநாள் நீங்கள் சொல்லியுள்ளதுபோல அடிக்கடி மாறியே வந்துள்ளது(அங்கும் ட்ரீட் தொல்லையோ? ;)
நேற்றைய லோகோ அழகான மர்மம் :)
Post a Comment