Thursday, September 9, 2010

Google Instant Search - தட்டச்சும் வேகத்தில் தேடலின் பெறுபேறு

2 comments




இனி கூகிள் தேடு பொறியில் தேடுவதற்கு "Enter" இனை அழுத்த வேண்டியதோ அல்லது "Google Search" பட்டனை கிளிக் பண்ண வேண்டிய அவசியமோ இல்லவே இல்லை. இன்று கூகிள் அறிமுகம் செய்த Google Instant Search மூலம் நீங்கள் தட்டச்சும் போதே தேடலின் பெறுபேறுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

கூகிள் இப்படிச் சொல்கிறது:

Google Instant is starting to roll-out to users on Google domains in the US, UK, France, Germany, Italy, Spain and Russia who use the following browsers: Chrome v5/6, Firefox v3, Safari v5 for Mac and Internet Explorer v8.

Please note, users on domains other than Google.com can only access Google Instant if they are signed in to a Google Account. 

We will continue to add new domains and languages over the next several months.


Wednesday, September 8, 2010

இன்னொரு புதிய கூகிள் Logo

5 comments


இன்னொரு புதிய கூகிள் Logo???


ஆம்...!!!


Each key you press brings more color.


Google logo + பிறந்தநாள்

2 comments
சில முக்கிய விடயங்களை பிரதிபலிக்கும் வண்ணம் தனது logo வினை சிறு மாற்றத்தினூடு அலங்கரித்து வருகின்றது கூகிள். ஆனால், கூகிளின் நேற்றைய logo எந்நிகழ்வைப் பிரதிபலிக்கின்றது என்பது இன்னும் புதிராகவே உள்ளது. இது தொடர்பான எந்தவொரு அறிவித்தலும் கூகிளிடமிருந்து கிடைக்க வில்லை.



ஆனால், இந்த logo கூகிளின் பிறந்தநாளைத்தான் குறிக்கின்றது என ஒரு சாராரிடமிருந்து ஊகம் எழுப்பப்படுகின்றது. கூகிள் 2002 ஆம் ஆண்டிலிருந்து - நான்காவது பிறந்தநாளிலிருந்து logo இனை அதற்கேற்ப அலங்கரித்து வருகின்றது. ஆனால், கூகிளின் பிறந்தநாள் எப்போது என்ற மயக்கம் இப்போதும் நிலவுகின்றது.

செப்ரெம்பர் 7 மற்றும் செப்ரெம்பர் 27 ஆகிய இரு நாட்களிலும் கூகிள் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வந்திருக்கின்றது. இது தொடர்பாக கூகிள் பின்வருமாறு சொல்கின்றது.

Google opened its doors in September 1998. The exact date when we celebrate our birthday has moved around over the years, depending on when people feel like having cake.

ஆனால், அண்மைய வருடங்களில் செப்ரெம்பர் 27ம் திகதியில் தான் தனது logo இனை பிறந்தநாளுக்கேற்ப மாற்றியிருக்கின்றது.


4வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 27th, 2002


5வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 7th, 2003


6வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 7th, 2004


7வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 27th, 2005


8வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 27th, 2006


9வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 27th, 2007


10வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 27th, 2008


11வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 27th, 2009


12வது பிறந்தநாள்: செப்ரெம்பர் 27th, 2010 ???


நேற்றைய logo விற்கான காரணம் செப்ரெம்பர் 27ம் திகதிவரை புரியாத புதிராகவே தான் இருக்குமா?


Tuesday, September 7, 2010

இன்றைய Google logo

0 comments

இன்னமும் என் நேரம் இன்றைய Google logo உடன் தான் கழிகின்றது. http://www.google.co.uk

Loving their HTML5 implementation. I am not sure about the future of flash. HTML 5 is so much better than flash.

ஏதாவதொரு சம்பவத்தை நினைவூட்ட தனது Logo வினை மாற்றிக் கொண்டிருந்த Google இன் இன்றைய Logo மாற்றத்திற்கு என்ன காரணம்?