Friday, July 2, 2010

வலைத்தளத்தில் என்ன நடக்கின்றது - Blogger stats


உங்கள் வலைத்தளத்தை கண்காணிக்க - யார் யார் வந்து போகின்றார்கள், எப்படி வருகின்றார்கள், எதையெல்லாம் விட்டுச் செல்கின்றார்கள் என்பதை அறிவதற்காக பல முறைகளை கையாள்கின்றோம். இந்த தேவைகளை நிறைவேற்ற எனக்கு ஒரு உளவாளியாக இருந்து உதவுவது Google Analytics. மூன்றாவது நபரை நாடிச் செல்வதை விட கூகிளின் சேவையொன்றை பயன்படுத்துவதற்கு நான் எப்போதும் முன்னுரிமை அளிக்கின்றேன்.

ஆனால், Google Analytics கொண்டு நான் பெறுகின்ற தரவுகளை இப்போது blogger உம் தருவதற்கு தயாராகிவிட்டது. இங்கே (Blogger in Draft) சென்று Stats இனைக் கிளிக் செய்வதன் மூலம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சேவையினை பெற்றுக் கொள்ள முடியும்.


இதற்காக உங்கள் வலைத்தளத்தில் எந்தவொரு Code இனையும் இடைச்செருகாமை, எந்தவொரு ஒழுங்கமைவு மாற்றங்களையும் ஏற்படுத்தாதது சிறப்பியல்பு.

நீங்கள்,
  • உங்கள் தளத்துக்கு வருபவர்களை கண்காணிப்பதுடன் அவர்கள் தொடர்பான மேலதிக தரவுகள் சிலவற்றையும் பெறலாம்.
  • உங்கள் பதிவுகளில் எப்பதிவின் மூலம் அதிகமானோர் உங்கள் தளத்தினை அடைந்திருக்கின்றார்கள்.
  • எந்த இணையத்தளம் உங்கள் வலைத்தளத்துக்கு அதிக வாசகர் வரவினை ஈட்டித்தந்துள்ளது.
  • எவ்வகை தேடுதல் உங்கள் பதிவினை பரிந்துரைத்திருக்கின்றது.
  • எந்த நாட்டிலிருந்து அதிகமானோர் வந்திருக்கின்றார்கள்.
  • எந்த இணைய உலவி கொண்டு வந்திருக்கின்றார்கள்.
  • ..........
போன்ற தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால், Blooger தவிர்ந்த ஏனைய வலைத்தளங்களின் சொந்தக்காரர்களுக்கு Blogger stats இப்போதைக்கு எட்டாக்கனிதான்.




9 comments:

கன்கொன் || Kangon said...

வலைத்தளத்தில் என்ன நடக்கிறது என்று தலைப்பின் பாதியைப் பார்த்தவுடன், 'ஆகா... சிங்கமும் பதிவுலக அரசியல் பற்றி எழுதிவிட்டதே' என்று யோசித்தேன்.
இது தொழிநுட்பப்பதிவா?

பகிர்விற்கு நன்றி. :)

Praveenkumar said...

அருமை நண்பரே..! நல்லதொரு பயனுள்ள தகவல்..! உங்கள் விளக்கம் அதைவிட அருமை..!

வந்தியத்தேவன் said...

நல்லதொரு தொழில்நுட்பப் பதிவு.

Subankan said...

அப்படியே உந்த அனானிப்பின்னூட்டம் போடுறவங்களோட IP யையும் தந்துட்டா நாங்கள் கஸ்டப்பட்டு கருவி எல்லாம் வைத்துக் கண்டுபிடிக்கவேண்டியிருக்காதே

Jana said...

நல்லதொரு தகவல். நன்றி ஆதிரை

Bavan said...

//Subankan said...
அப்படியே உந்த அனானிப்பின்னூட்டம் போடுறவங்களோட IP யையும் தந்துட்டா நாங்கள் கஸ்டப்பட்டு கருவி எல்லாம் வைத்துக் கண்டுபிடிக்கவேண்டியிருக்காதே //

நோ பாலிட்டிக்ஸ் ப்பிளீஸ்..:P

பகிர்வுக்கு நன்றிங்ணா..:)))

Umapathy said...

என்னோட ப்ளாக்ல status பட்டன் தெரியல ஏன் நான் என்ன பன்னனும்

ஆதிரை said...

@Umapathy,உமாபதி

// என்னோட ப்ளாக்ல status பட்டன் தெரியல ஏன் நான் என்ன பன்னனும்//

அது Stats button.
Url இதுதானா என்று மீண்டுமொருமுறை உறுதி செய்து கொள்ளூங்கள்.
http://draft.blogger.com/home

SShathiesh-சதீஷ். said...

நல்லதொரு பயனுள்ள தகவல்