உங்கள் வலைத்தளத்தை கண்காணிக்க - யார் யார் வந்து போகின்றார்கள், எப்படி வருகின்றார்கள், எதையெல்லாம் விட்டுச் செல்கின்றார்கள் என்பதை அறிவதற்காக பல முறைகளை கையாள்கின்றோம். இந்த தேவைகளை நிறைவேற்ற எனக்கு ஒரு உளவாளியாக இருந்து உதவுவது
Google Analytics. மூன்றாவது நபரை நாடிச் செல்வதை விட கூகிளின் சேவையொன்றை பயன்படுத்துவதற்கு நான் எப்போதும் முன்னுரிமை அளிக்கின்றேன்.
ஆனால், Google Analytics கொண்டு நான் பெறுகின்ற தரவுகளை இப்போது blogger உம் தருவதற்கு தயாராகிவிட்டது.
இங்கே (
Blogger in Draft) சென்று Stats இனைக் கிளிக் செய்வதன் மூலம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சேவையினை பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்காக உங்கள் வலைத்தளத்தில் எந்தவொரு Code இனையும் இடைச்செருகாமை, எந்தவொரு ஒழுங்கமைவு மாற்றங்களையும் ஏற்படுத்தாதது சிறப்பியல்பு.
நீங்கள்,
- உங்கள் தளத்துக்கு வருபவர்களை கண்காணிப்பதுடன் அவர்கள் தொடர்பான மேலதிக தரவுகள் சிலவற்றையும் பெறலாம்.
- உங்கள் பதிவுகளில் எப்பதிவின் மூலம் அதிகமானோர் உங்கள் தளத்தினை அடைந்திருக்கின்றார்கள்.
- எந்த இணையத்தளம் உங்கள் வலைத்தளத்துக்கு அதிக வாசகர் வரவினை ஈட்டித்தந்துள்ளது.
- எவ்வகை தேடுதல் உங்கள் பதிவினை பரிந்துரைத்திருக்கின்றது.
- எந்த நாட்டிலிருந்து அதிகமானோர் வந்திருக்கின்றார்கள்.
- எந்த இணைய உலவி கொண்டு வந்திருக்கின்றார்கள்.
- ..........
போன்ற தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால், Blooger தவிர்ந்த ஏனைய வலைத்தளங்களின் சொந்தக்காரர்களுக்கு Blogger stats இப்போதைக்கு எட்டாக்கனிதான்.